Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மசூர் பருப்பு அதிகளவில் கிடைக்க இறக்குமதி வரியை குறைத்தது மத்திய அரசு

மசூர் பருப்பு அதிகளவில் கிடைக்க இறக்குமதி வரியை குறைத்தது மத்திய அரசு

By: Nagaraj Thu, 04 June 2020 11:50:38 AM

மசூர் பருப்பு அதிகளவில் கிடைக்க இறக்குமதி வரியை குறைத்தது மத்திய அரசு

மசூா் பருப்பு மீதான இறக்குமதி வரியை 10 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது. உள்நாட்டில் மசூா் பருப்பு அதிக அளவில் கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு, 3 மாதங்களுக்கு மட்டும் இந்த வரி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உலகளவில் இந்தியாவே பருப்பு வகைகளை அதிகம் பயன்படுத்தும் நாடாகவும், இறக்குமதி செய்யும் நாடாகவும் உள்ளது.

import tax,10 per cent,masur dal,declaration,central government ,இறக்குமதி வரி, 10 சதவீதம், மசூர் பருப்பு, அறிவிப்பு, மத்திய அரசு

இதில் மசூா் பருப்பு மீதான இறக்குமதி வரி 30 சதவீதமாக இருந்தது. அதனை மத்திய அரசு தற்போது குறைத்துள்ளது. இதற்காக கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையை மத்திய மறைமுக வரிகள் வாரியம் திருத்தி, புதிய அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

இதன்படி நிகழாண்டு ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி வரை மசூா் பருப்பு மீதான இறக்குமதி வரி 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

Tags :