Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தகவல்

கொரோனா சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தகவல்

By: Nagaraj Thu, 22 Dec 2022 10:15:51 PM

கொரோனா சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: எச்சரிக்கை... கொரோனா சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு, மாநில அரசுகளை எச்சரித்துள்ளது.

டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத் துறை செயலாளர்கள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ராஜீவ் பால், நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால், தொற்றுநோய்க்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவர் என்.எல். அரோரா, பயோடெக்னாலஜி செயலாளர் ராஜேஷ் கோகலே, சீரம் இன்ஸ்டிடியூட் சிஇஓ ஆதார் பூனாவாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

corona,poonawala,vaccine,poonawala,to follow ,கொரோனா, தடுப்பூசி, பூனாவாலா, பின்பற்ற வேண்டும்

கூட்டத்தின் முடிவில், கொரோனா சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு, மாநில அரசுகளை எச்சரித்துள்ளது. இந்நிலையில், தற்போது பரவி வரும் கொரோனா குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளதாக சீரம் தடுப்பூசி நிறுவனத்தின் சி.ஐ.ஓ. ஆதார் பூனாவாலா கூறினார்.

ஆதார் பூனாவாலா வெளியிட்டுள்ள இந்த செய்தியில், சீனாவில் அதிகரித்து வரும் தொற்று கவலை அளிக்கிறது. இருப்பினும், நாம் பயப்படத் தேவையில்லை. ஏனென்றால் நாம் ஒரு சிறப்பான முறையில் தடுப்பூசியால் பாதுகாக்கப்பட்டு இருக்கிறோம்.

மத்திய அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Tags :
|