Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா உயர்ந்து வரும் நிலையில் மத்திய அரசு இன்று ஆலோசனை

கொரோனா உயர்ந்து வரும் நிலையில் மத்திய அரசு இன்று ஆலோசனை

By: vaithegi Fri, 07 Apr 2023 10:07:25 AM

கொரோனா உயர்ந்து வரும் நிலையில் மத்திய அரசு இன்று ஆலோசனை

புதுடெல்லி: மத்திய அரசு இன்று ஆலோசனை ... நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல உயர தொடங்கியுள்ளது. இதையடுத்து கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவு கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டிவுள்ளது இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஒரு நாள் கொரோனா நேற்று 5 ஆயிரத்தை கடந்தது.

மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 23,091-ல் இருந்து 25,587ஆகவும் அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் தலை தூக்கியுள்ள நிலையில், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க தொடங்கியுள்ளது. முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க அறிவுறுத்தி கொண்டு வருகின்றனர்.

corona,advisory,central govt ,கொரோனா ,ஆலோசனை,மத்திய அரசு

இச்சமயத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், அனைத்து மாநில சுகாதார துறை அமைச்சர்களுடன், மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று (வெள்ளிக்கிழமை) காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்.

அப்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி அறிவுறுத்தப்படும் என்றும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. மாநிலங்கள் எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்துகிறார்.

Tags :
|