Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்ற மத்திய அரசு பரிசீலனை

இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்ற மத்திய அரசு பரிசீலனை

By: Nagaraj Wed, 06 Sept 2023 07:10:30 AM

இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்ற மத்திய அரசு பரிசீலனை

புதுடில்லி: பாரத் என்று மாற்ற பரிசீலனை... இந்தியாவின் பெயரை பாரத் என்று அதிகாரப்பூர்வமாக மாற்ற மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் வரும் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தொடரில் நாட்டின் பெயர் மாற்ற சட்டத் திருத்தம் நிறைவேற்றப்படக் கூடும் என டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றனர்.

இதனிடையே, வரும் 9ஆம் தேதி நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டுக்கான இரவு விருந்து அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடுவதற்கு பதில், பாரதத்தின் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டுள்ளது.

bharat,name change,india,parliament,yatra,congress party ,பாரத், பெயர் மாற்றம், இந்தியா, நாடாளுமன்றம், யாத்திரை, காங்கிரஸ் கட்சி

பெயர் மாற்ற விவகாரத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், நாட்டின் கவுரவம் மற்றும் பெருமை தொடர்பான அனைத்து விஷயங்களையும் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பது ஏன் என பா.ஜ.க. தேசியத் தலைவர் நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.

பாரத் ஜோடோ என்று யாத்திரை நடத்துபவர்கள் பாரத் மாதா கீ ஜே என்ற முழக்கத்தை மட்டும் வெறுப்பது ஏன் என்றும் அவர் வினவியுள்ளார். மேலும், நீண்ட நாட்களாக வழக்கத்தில் உள்ள பாரத் என்ற சொல்லை பயன்படுத்துவது தவறு என்று கூற முடியாது என நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

Tags :
|
|
|