Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிஜிட்டல் பரிவர்த் தனை நடைமுறையில் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிடல்

டிஜிட்டல் பரிவர்த் தனை நடைமுறையில் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிடல்

By: vaithegi Thu, 30 Nov 2023 2:17:18 PM

டிஜிட்டல் பரிவர்த் தனை நடைமுறையில் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிடல்

இந்தியா: ரூ.2,000-க்கு மேல் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு புதிய கட்டுப்பாடு திட்டம் ...மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “ரிசர்வ் வங்கி, பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகள், கூகுள், ரேசர்பே போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களுடன் நேற்று மத்திய அரசு கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தியது. டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் நடைபெறும் மோசடிகளைத் தடுப்பது பற்றி இக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது. அப்போது, ரூ.2,000-க்கு மேல் முதன்முறையாக 1 கணக்குக்கு பரிவர்த்தனை செய்வதற்கு 4 மணி நேரம் அவகாசம் வழங்கினால், மோசடிகளைக் குறைக்க முடியும் என யோசனை முன்வைக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

எனவே இதன்படி, புதிதாக 1 கணக்கு ரூ.2,000-க்கு மேல் பரிவர்த்தனை செய்ய வேண்டுமென்றால், 4 மணி நேரம் காத்திருக்க வேண்டும். யுபிஐ உட்பட அனைத்து வகையான டிஜிட்டல் பரிவர்த் தனைகளுக்கு இக்கட்டுப்பாட்டைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.

central government,digital transformation unit ,மத்திய அரசு ,டிஜிட்டல் பரிவர்த் தனை


பொதுமக்களின் மொபைல் எண்ணுக்கு மோசடியான இணைய இணைப்புகளை அனுப்பி பணம்பறித்தல், வங்கி அதிகாரிகள் போன்று பேசி மக்களிடம் இருந்து வங்கி கடவுச் சொல்லை ஏமாற்றிப் பெறுதல் உட்பட பல்வேறு வகையான சைபர் மோசடிகள் இந்தியாவில் அதிகரித்து உள்ளன.

இதையடுத்து இத்தகைய மோசடிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசுதீவிரமாக இறங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாகவே, டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடு கொண்டுவர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :