Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஓடிடி தளங்கள் தடை செய்ய ஒழுங்குமுறை பணிகளை மேற்கொள்ளும் மத்திய அரசு

ஓடிடி தளங்கள் தடை செய்ய ஒழுங்குமுறை பணிகளை மேற்கொள்ளும் மத்திய அரசு

By: Nagaraj Sat, 08 July 2023 4:52:03 PM

ஓடிடி தளங்கள் தடை செய்ய ஒழுங்குமுறை பணிகளை மேற்கொள்ளும் மத்திய அரசு

புதுடில்லி: ஓடிடி தளங்கள் தடை?... நாட்டில் சில ஓடிடி தளங்களை தடை செய்யும் வகையில் ஒழுங்குமுறை பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பாக மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த விவகாரம் தொடர்பாக பரிந்துரைகளை பரிந்துரைகளை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதில், முன்னணியிலுள்ள சில ஓடிடி தளங்களையும் இணைய தளங்களுக்கு நாட்டின் சில குறிப்பிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட நேரங்களில் கட்டுப்பாடுகளை விதிப்பதில் உள்ள தொழில்நுட்ப சவால்கள் குறித்து கேட்கப்பட்டுள்ளது.

regulation,authority,videos,stakeholders,prohibition ,ஒழுங்குமுறை, ஆணையம், வீடியோக்கள், பங்குதாரர்கள், தடை

மேலும், அத்தகைய சவால்களை சரிசெய்வதற்காக சாத்தியக்கூறுகளை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓடிடி தளங்களைத் தவிர்த்து சில இணையதளங்களையும் தடை செய்வதற்கான தேவை உள்ளதா என பங்குதாரர்களிடம் கேட்கப்பட்டுள்ளது.

ஓடிடி தளங்களில் பல்வேறு வகுப்பு அல்லது பிரிவுகளில் வீடியோக்கள் உள்ள நிலையில், எந்த வகுப்பில் உள்ள ஓடிடி தளங்கள் தடை செய்ய வேண்டிய வரையறைக்குக் கீழ் வருகிறது எனவும் ஒழுங்குமுறை ஆணையம் கேட்டுள்ளது.

Tags :
|