Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளி மாணவர்களுக்கும் தனித்துவமாக அடையாள அட்டையை வழங்க மத்திய அரசு திட்டமிடல்

பள்ளி மாணவர்களுக்கும் தனித்துவமாக அடையாள அட்டையை வழங்க மத்திய அரசு திட்டமிடல்

By: vaithegi Mon, 13 Nov 2023 11:20:08 AM

பள்ளி மாணவர்களுக்கும் தனித்துவமாக அடையாள அட்டையை வழங்க மத்திய அரசு திட்டமிடல்

இந்தியா: பள்ளி மாணவர்களுக்கான புதிய திட்டம் ... இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தனித்துவமாக ஆதார் கார்டு வழங்கப்பட்டதை போல பள்ளி குழந்தைகளுக்கும் தனித்துவ அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

அந்த வகையில் அபார் என்கிற இந்த தனித்துவ அடையாள அட்டை மூலமாக மாணவர்களின் கல்வி விவரங்கள் அனைத்தும் அறிந்து கொள்ளலாம்.

central government,school students,details,abar card , மத்திய அரசு ,பள்ளி மாணவர்கள்,விவரங்கள் , அபார் கார்டு

அதாவது, ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட தகவல்கள், கல்வி விவரங்கள் மற்றும் திறமைகள் அனைத்தும் பதிவு செய்யப்படும்.

இதனை, அபார் கார்டு மூலமாக அறிந்து கொள்ளும்படியாக மத்திய அரசு வழங்கவுள்ளது. பெற்றோர்களிடம் இந்த திட்டம் பற்றி கருத்து கேட்கப்பட்டு அடுத்த கல்வியாண்டில் அமல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாணவர்களின் கல்வி நிலையை அறிய இந்த அபார் அடையாள அட்டை மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

Tags :