Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரிசர்வ் வங்கியின் முழுமையான அனுமதி பெறாமல் லோன் வழங்கிவரும் ஆப்களை ஆப் ஸ்டோரில் இருந்து நீக்க வேண்டும் .. மத்திய அரசு

ரிசர்வ் வங்கியின் முழுமையான அனுமதி பெறாமல் லோன் வழங்கிவரும் ஆப்களை ஆப் ஸ்டோரில் இருந்து நீக்க வேண்டும் .. மத்திய அரசு

By: vaithegi Fri, 09 Sept 2022 5:13:44 PM

ரிசர்வ் வங்கியின் முழுமையான அனுமதி பெறாமல் லோன் வழங்கிவரும் ஆப்களை ஆப் ஸ்டோரில் இருந்து நீக்க வேண்டும்  ..  மத்திய அரசு

இந்தியா: கல்விக் கடன், விவசாயக் கடன் எண்டு அனைத்திற்குமே பொது மக்கள் வங்கியின் மூலமாகவோ அல்லது மொபைல் செயலியின் மூலமாகவோ தான் லோன் வாங்கி அதை செயல்படுத்தி கொண்டு வருகின்றனர். மேலும், வங்கியின் மூலமாக லோன் வாங்குவதற்கு அதிக நாட்கள் தேவைப்படும் என்பதால் பலரும் மிக எளிமையாக மொபைல் மூலமாக கிடைக்கும் லோனை வாங்கி விடுகின்றனர்.

ஆனால், இந்த மொபைல் ஆப் லோனில் பலவிதமான மோசடிகள் நடைபெற்று கொண்டு வருகின்றன.
இருந்தாலும்கூட பொதுமக்கள் மொபைல் செயலியின் மூலமாகவே லோன் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதாவது வங்கியில் கொடுக்கும் லோனை காட்டிலும் குறைவான வட்டி விகிதத்துடன் மொபைல் செயலியில் அதிகமான லோன் வழங்கப்படுகிறது.

central government,loan,reserve bank ,மத்திய அரசு,லோன் ,ரிசர்வ் வங்கி


அதாவது, ஆதார் கார்டு, பான் கார்டு ஆகிய ஆவணங்களை சமர்ப்பித்தால் எளிமையாக ஓரிரு நாட்களில் லோன் கிடைத்து விடுகிறது. இதனால் மக்கள் எளிமையாக கிடைக்கிறது என்பதற்காக மொபைல் செயலி மூலமாக லோன் வாங்கி ஏமாந்து கொண்டிருக்கின்றனர்.

இதை அடுத்து இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் முழுமையான அனுமதியை பெறாமல் சட்டவிரோதமாக பொது மக்களுக்கு லோன் வழங்கி வரும் லோன் ஆப்களை உடனடியாக ஆப் ஸ்டோரில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், ஆப் ஸ்டோரில் இருந்து சட்டவிரோதமாக லோன் வழங்கி வரும் ஆப்களை நீக்க வேண்டும் எனவும், அதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Tags :
|