Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்திய அரசு எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது - ரமேஷ் பொக்ரியால்

மத்திய அரசு எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது - ரமேஷ் பொக்ரியால்

By: Karunakaran Sun, 02 Aug 2020 7:05:10 PM

மத்திய அரசு எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது - ரமேஷ் பொக்ரியால்

இந்தியாவில் மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு மாநிலங்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன, மேலும் இந்த திட்டத்தின் மும்மொழி கல்வி கொள்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து இன்று பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.

இந்நிலையில் தேசம் வெல்ல தேசியக் கல்விக் கொள்கை... என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதில் அளித்துள்ளார்.

central government,language,ramesh pokriyal,tamil ,மத்திய அரசு, மொழி, ரமேஷ் போக்ரியால், தமிழ்

மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில், பொன் ராதாகிருஷ்ணன் ஜி, தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கை (NEP)-ஐ நடைமுறைப்படுத்துவதற்கான உங்கள் வழிகாட்டலை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசு எந்தவொரு மாநிலத்தின் மீதும், எந்த மொழியையும் திணிக்காது என மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

ரமேஷ் பொக்ரியால் மத்திய அரசு எந்தவொரு மாநிலத்தின் மீதும், எந்த மொழியையும் திணிக்காது என்ற செய்தி மூலம் புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கல்வி கட்டாயப்படுத்தப்பட மாட்டாது என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து மத்திய அரசு எந்த அறிவிப்பும் தெரிவிக்கவில்லை.

Tags :