Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு நிலவரத்தை மத்திய சுகாதாரத்துறை இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டது

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு நிலவரத்தை மத்திய சுகாதாரத்துறை இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டது

By: vaithegi Tue, 21 June 2022 10:36:58 AM

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு நிலவரத்தை மத்திய சுகாதாரத்துறை இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டது

இந்தியா: கடந்த 24 மணி நேரத்தில் 9,923 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 15-ந் தேதி பாதிப்பு 8,822 ஆக இருந்தது. அதன்பிறகு 5 நாட்கள் 12 ஆயிரம், 13 ஆயிரத்தை தாண்டி இருந்த நிலையில் இன்று 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 33 லட்சத்து 19 ஆயிரத்து 396 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 7,293 பேர் மீண்டு வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 27 லட்சத்து 15 ஆயிரத்து 193 ஆக உயர்ந்தது. தற்போது 79,313 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று கொண்டு வருகிறார்கள். இதுநேற்றை விட 2,613 அதிகமாகும்.

federal department of health,examination,corona ,மத்திய சுகாதாரத்துறை,பரிசோதனை ,கொரோனா

மேலும், தொற்று பாதிப்பால் டெல்லியில் நேற்று ஒரே நாளில் மட்டும் 6 பேர் இறந்துள்ளனர். இதுதவிர கேரளாவில் திருத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட 5 மரணங்கள், மகாராஷ்டிராவில் 2, மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசத்தில் தலா ஒருவர் என மேலும் 17 பேர் இறந்துள்ளனர்.

இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5,24,890 ஆக உயர்ந்தது. நாடு முழுவதும் நேற்று 13,00,024 டோஸ்களும், இதுவரை 196 கோடியே 32 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி நேற்று 3,88,641 மாதிரிகளும், இதுவரை 85.85 கோடி மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என தகவல் அளித்துள்ளது.

Tags :