Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நூற்றாண்டு காலமாக நடைபெற்ற அயோத்தி சட்ட போராட்டம் முடிவுக்கு வந்தது

நூற்றாண்டு காலமாக நடைபெற்ற அயோத்தி சட்ட போராட்டம் முடிவுக்கு வந்தது

By: Karunakaran Wed, 05 Aug 2020 11:52:46 AM

நூற்றாண்டு காலமாக நடைபெற்ற அயோத்தி சட்ட போராட்டம் முடிவுக்கு வந்தது

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தை ராமஜென்மபூமி நியாசுக்கு வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு, கடந்த ஆண்டு நவம்பர் 9-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. 90 ஆண்டு காலம் ஆங்கிலேயர் ஆட்சியிலும், 70 ஆண்டு காலம் சுதந்திர இந்தியாவிலும் நடந்த சட்ட போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சியில் 1857, 1859, 1860-1884, 1885, 1886, 1870-1923 ஆகிய ஆண்டுகளில் இந்த சட்ட போராட்டம் நடைபெற்றது. சுதந்திரத்துக்கு பின்னர் இந்த பிரச்சினை மேலும் வலுத்தது. 1949 டிசம்பர் 22, 23: நள்ளிரவில் ராமர், லட்சுமணர் சிலைகள் வைக்கப்பட்டன. மக்கள் கூடினர். அங்கு பக்திப் பாடல்கள் பாடப்பட்டன. 1961 டிசம்பர் 18 சன்னி மத்திய வக்பு வாரியம் பாபர் மசூதியை தங்களிடம் ஒப்படைக்க கோரி வழக்கு தொடர்ந்தது.

century,ayodhya,legal battle,ram temple ,நூற்றாண்டு, அயோத்தி, சட்டப் போர், ராம் கோயில்

அதன் பின், 1986, 1987, 1989, 1992, 1993, 2002, 2003, 2010, 2011வரை தொடர்ந்து வழக்கு தொடரப்பட்டது. அதன்பின், 2017-2019 ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் முதலில், தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ராவும், பின்னர் ரஞ்சன் கோகாயும் அயோத்தி வழக்கில் கவனம் செலுத்தினர். 2018 ஆம் ஆண்டு அக்டோபரில் ரஞ்சன் கோகாய், தலைமை நீதிபதியாக பதவி ஏற்றதும், அயோத்தி வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க விருப்பம் தெரிவித்தார்.

அதன்பின் இந்த அயோத்தி வழக்கு குறித்து தீவிர விசாரணை நடைபெற்றது. 2019 நவம்பர் 9-ஆம் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எஸ்.ஏ.போப்டே, எஸ்.அப்துல் நசீர், அசோக் பூஷண் ஆகியோரை கொண்ட அரசியல் சாசன அமர்வு தனது தீர்ப்பை அளித்தது. சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும், முஸ்லிம்களுக்கு மசூதி கட்டிக்கொள்வதற்கு 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. தற்போது 2020 ஆகஸ்டு 5-ஆம் தேதியான இன்று அயோத்தியில் ராமர்கோவிலுக்கு பூமி பூஜை நடைபெறுகிறது.

Tags :