Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று முதல் தொடக்கம்

பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று முதல் தொடக்கம்

By: vaithegi Mon, 01 Aug 2022 12:44:06 PM

பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று முதல் தொடக்கம்

சென்னை: பி.இ , பிடெக், பிஆர்க் ஆகிய பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் கடந்த ஜூன் 27 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பொறியியலில் படிப்பிற்கு விண்ணப்பிக்க கடந்த ஜூலை 19 ஆம் தேதி வரைக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், சிபிஎஸ்இ மாணவர்களின் தேர்வு முடிவுகள் ஜூலை 22 ஆம் தேதி தான் வெளியானதால் பி.இ , பிடெக், பிஆர்க் போன்ற பொறியியல் படிப்புகளில் சேர ஜூலை 27 ஆம் தேதி வரைக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

in engineering course,certificate verification ,பொறியியல் படிப்பில்,சான்றிதழ் சரிபார்ப்பு

இதற்கிடையே, மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர அந்த மாணவர்கள் படித்த பள்ளிகள் வாயிலாகவும், மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் சிறப்பு மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பித்தனர். இது வரைக்கும் மட்டும் 2,11,905 மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில், பொறியியல் கல்லூரி கலந்தாய்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று முதல் தொடங்குகிறது. அதாவது, பொறியியல் படிப்பிற்கு சேர விண்ணப்பித்துள்ள 2,11,905 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று முதல் துவங்கியிருக்கிறது.

அதே மாதிரி விளையாட்டுப் பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்ப்பும் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதனிடையே, சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள 2042 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தினமும் 250 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தலாம் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் முடிவெடுத்துள்ளது.

Tags :