Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவால் ஏற்பட்டுள்ள சவால்கள், தகவல் பாதுகாப்பு குறித்து சுந்தர்பிச்சையுடன் மோடி பேச்சு

கொரோனாவால் ஏற்பட்டுள்ள சவால்கள், தகவல் பாதுகாப்பு குறித்து சுந்தர்பிச்சையுடன் மோடி பேச்சு

By: Karunakaran Tue, 14 July 2020 09:23:41 AM

கொரோனாவால் ஏற்பட்டுள்ள சவால்கள், தகவல் பாதுகாப்பு குறித்து சுந்தர்பிச்சையுடன் மோடி பேச்சு

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பல தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையுடன் காணொளிக் காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொண்டார்.

வேலை சூழலில் கொரோனா தொற்று ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள், தகவல் பாதுகாப்பு போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், விவசாயிகள், இளைஞர்கள், தொழில்முனைவோர் குறித்து சுந்தர் பிச்சையுடன் பேசியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

modi,sundarpitchai,corona virus,information security ,மோடி, சுந்தர்பிச்சை, கொரோனா வைரஸ், தகவல் பாதுகாப்பு

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சையுடனான கலந்துரையாடல் மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்தது. கொரோனாவால் ஏற்பட்டுள்ள சவால்கள், தகவல் பாதுகாப்பு குறித்தும் விவாதித்தோம். கல்வி, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் கூகுளின் செயல்பாடு குறித்தும் கேட்டறிந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், இந்தியாவின் விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோரின் வாழ்க்கையை மாற்ற தொழில்நுட்பத்தின் ஆற்றலை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கல்வி, கற்றல், டிஜிட்டல் இந்தியா, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை போன்ற பல துறைகளில் கூகுள் நிறுவனத்தின் புதிய முயற்சிகளைப் பற்றி மேலும் அறிந்து கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Tags :
|