Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் இன்று மீண்டும் ஆலோசனை; முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு

மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் இன்று மீண்டும் ஆலோசனை; முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு

By: Monisha Sat, 30 May 2020 09:33:26 AM

மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் இன்று மீண்டும் ஆலோசனை; முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு

தமிழகத்தில் கடந்த 1-ந்தேதியில் இருந்து நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரேநாளில் அதிக தொற்று கண்டறியப்பட்டது இதுதான் முதல்முறை. இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்து உள்ளது. இக்குழுவின் பரிந்துரையின் பேரில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

tamil nadu,coronavirus,chief minister edappadi palanisamy,medical group of experts,consulting ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,மருத்துவ நிபுணர்கள் குழு,ஆலோசனை

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது நடைமுறையில் உள்ள 4ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையின்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை, நெறிமுறைகள் குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது.

Tags :