Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆளுநருக்கு எதிராக தனித்தீர்மானம்.. பேரவையில் முதல்வர் இன்று தாக்கல்

ஆளுநருக்கு எதிராக தனித்தீர்மானம்.. பேரவையில் முதல்வர் இன்று தாக்கல்

By: vaithegi Mon, 10 Apr 2023 10:49:17 AM

ஆளுநருக்கு எதிராக  தனித்தீர்மானம்.. பேரவையில் முதல்வர் இன்று தாக்கல்

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மத்திய அரசு உரிய அறிவுரைகளை வழங்க வலியுறுத்தி இன்று சட்டப்பேரவையில் தனி தீர்மானம் , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல் .... தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் குடிமைப்பணி தேர்வர்களுடன் உரையாடும்போது, “பேரவைத் தீர்மானங்கள் - மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தால், நாகரிகமாக அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்பது பொருள்.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானம் அரசியல் அமைப்பு விதிக்குட்பட்டு உள்ளதா என்பதை ஆளுநர் கண்காணிக்க வேண்டும். சட்டப்பேரவையில் நிறைவேற்றினால் மட்டும் சட்டமா ஆகாது. சட்டசபை ஓர் அங்கம் மட்டும்தான். சட்டசபை ஒரு அங்கமாக இருப்பதால்தான் ஆளுநருக்கு பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன” என பேசியிருந்தார்.

principal,legislature,governor ,முதல்வர் ,
சட்டப்பேரவை,ஆளுநர்

இதையடுத்து இது அரசியல் தலைவர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. பலரும் கண்டம் தெரிவித்து வந்த நிலையில் இன்று பேரவையில் தனி தீர்மானம் தாக்கல் செய்யப் பட உள்ளது. நடப்பு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனி தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்கிறார். அதில் தமிழக ஆளுநருக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவரை வலியுறுத்தி இத்தனித்தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க அறிவுறுத்த வேண்டும் எனவும், நிறைவேறும் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் தர மத்திய அரசு, குடியரசுத் தலைவர் கால நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் பொதுவெளியில் ஆளுநர் தெரிவிக்கும் கருத்துக்கள் பேரவையின் மாண்பை குறைக்கும் வகையில் உள்ளதாகவும், அது மாநில நிர்வாகத்துக்கு ஏற்புடையதல்ல அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தீர்மானம் எம்.எல்.ஏ.க்களின் விவாதத்துக்கு வைக்கப்பட்டு நிறைவேற்றப்படும் எனவும் தெரிகிறது.

Tags :