Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கான உரிமைத்தொகை திட்டம் இடம்பெறும் .. முதல்வர் உறுதி

தமிழக பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கான உரிமைத்தொகை திட்டம் இடம்பெறும் .. முதல்வர் உறுதி

By: vaithegi Tue, 14 Mar 2023 2:01:07 PM

தமிழக பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கான உரிமைத்தொகை திட்டம் இடம்பெறும் .. முதல்வர் உறுதி

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற 20-ம் தேதி அன்று நிதியமைச்சர் அவர்களால் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையடுத்து இந்த பட்ஜெட்டில் திமுக தனது வாக்குறுதியில் அறிவித்த குடும்ப தலைவிகளுக்கான மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் திட்டம் குறித்து அறிவிப்பு இடம்பெறும் என்று தமிழக முதல்வர் உறுதியளித்துள்ளார்.

மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அந்த வகையில், மகளிர் மேம்பாட்டு கழகத்தால், சொந்த வீடு இல்லாத குடும்ப தலைவிகள், அன்றாட கூலி வேலை செய்யும் குடும்ப தலைவிகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் ஆகியோரின் பட்டியலை சேகரித்து கொண்டு வருகிறது.

chief minister,budget ,முதல்வர் ,பட்ஜெட்


இதே போன்று வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், பி.எச்.எச், ஏ.ஏ.ஒய் என்ற அந்த்யோதயா அன்ன யோஜனா ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கும் மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் தமிழக பட்ஜெட்டில் பெண்களுக்கான உரிமைத்தொகை அறிவிப்பது தொடர்பாக நேற்று முதல்வர் தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து இது தொடர்பாக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது,

தமிழக பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கான உரிமைத்தொகை அறிவிப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் , தகுதியான குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை கிடைக்க பல விதமான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Tags :