Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 தொகை ஜூலை 19ம் தேதி அன்று முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 தொகை ஜூலை 19ம் தேதி அன்று முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்

By: vaithegi Sun, 16 July 2023 10:55:51 AM

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 தொகை ஜூலை 19ம் தேதி அன்று முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்

சென்னை: அரசின் தேர்தல் வாக்குறுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 2000 உதவி தொகையாக அளிக்கும் திட்டம் குறித்த முக்கிய தகவல்கள் அனைத்தும் தற்போது வெளியாகி உள்ளது. கர்நாடகா மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு புதிதாக பதவியேற்று உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசு அளித்திருந்த முக்கிய 5 இலவச திட்டங்கள் அனைத்தும் பதவியேற்றது முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அதிக மக்கள் எதிர்பார்த்து வந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2000 உதவித்தொகை அளிக்கும் திட்டம் வரும் ஆகஸ்ட் 15 தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

principal,head of the family ,முதல்வர் ,குடும்பத் தலைவி

இதனை அடுத்து கிரகலட்சுமி திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் குறித்த தகவல்களை பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் தெரிவித்துள்ளார். எனவே அதன்படி இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் பெண்கள் வருகிற ஜூலை 19ஆம் தேதி முதல் கர்நாடகா 1, பெங்களூர் 1, கிராம 1 போன்ற மையங்களுக்கு சென்று ரூபாய் 12 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

இதற்கு மேல் எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டிய தேவை இல்லை என்றும், ரேஷன் கார்டு கட்டாயம் வைத்திருக்க வேண்டும் எனவும், ஆதார் மற்றும் வங்கி கணக்கு இணைக்கப்பட்டிருப்பது அவசியம் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார், ரேஷன் கார்டு இணைக்கப்படாத பட்சத்தில் தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Tags :