Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு முதலமைச்சர் வரும் 23--ம் தேதி செல்ல உள்ளார்

ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு முதலமைச்சர் வரும் 23--ம் தேதி செல்ல உள்ளார்

By: vaithegi Tue, 09 May 2023 3:40:28 PM

ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு முதலமைச்சர் வரும்  23--ம் தேதி செல்ல உள்ளார்

சென்னை: ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மிட்சுபிசி எலக்ட்ரிக் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்று வரும் நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆ னது.

இதன்பின்னர், இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2024 ஜனவரியில் நடைபெற உள்ள முதலீட்டாளர்களை மாநாட்டுக்கு வருமாறு உலக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளேன்.

chief minister,japan,singapore ,முதலமைச்சர் ,ஜப்பான், சிங்கப்பூர்

முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக ஜப்பான் மற்றும் சிங்கப்பூருக்கு வருகிற 23-ம் தேதி செல்ல உள்ளேன். ஏற்றுமதி மேம்பாட்டுக்காக தமிழ்நாடு அரசு பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது. எனவே அதன்படி, ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளில் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டில் நான் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில், தொழில்துறை நிகழ்ச்சிகள் தான் அதிகம் என தெரிவித்தார்.

மேலும், பெண்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களை வரவேற்கிறோம்.தெற்காசியா அளவில் முதலீடுகளை ஈர்த்திட சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்க பெரும் முயற்சி எடுத்து கொண்டு வருகிறோம். ஜப்பான் – தமிழ்நாடு உறவை மேம்படுத்த பயணம் மேற்கொள்ள உள்ளேன் எனவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு என அவர் கூறினார்.

Tags :
|