Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

By: Monisha Fri, 04 Dec 2020 12:18:55 PM

முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

மதுரை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.1,296 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கான டெண்டர்கள் விடப்பட்டு பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

இதன்தொடர்ச்சியாக இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி பேசினார்.

madurai,drinking water,project,tender,foundation ,மதுரை,குடிநீர்,திட்டம்,டெண்டர்,அடிக்கல்

அப்போது முதலமைச்சர் கூறியதாவது:- முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குடிநீர் விநியோக திட்டம் 2023ல் நிறைவு பெறும். புதிய திட்டத்தால் மதுரையில் 1.10 லட்சம் கூடுதல் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் இந்த விழாவில் கலெக்டர் அலுவலகத்தில் ரூ.33 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடம் உள்பட ரூ.69 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய திட்டப்பணிகளையும் தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, வேலுமணி, உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags :
|