Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்கும் திட்டம் முதல்வர் துவங்கிவைப்பு

உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்கும் திட்டம் முதல்வர் துவங்கிவைப்பு

By: vaithegi Fri, 12 Aug 2022 12:13:26 PM

உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,000 நிவாரணம்  வழங்கும் திட்டம்  முதல்வர் துவங்கிவைப்பு

சென்னை: தமிழகத்தில், தூத்துக்குடி, வேதாரண்யம், மரக்காணம் என்று 10 கடலோர மாவட்டங்களில் 43,174 ஏக்கர் நிலத்தில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு கொண்டு வருகிறது. இந்த உப்பள தொழிலில் ஏறத்தாழ ஒரு லட்சம் தொழிலாளர்கள் நேரடியாக ஈடுபடுகின்றனர்.

இதனை ஆவது இந்த உப்பள தொழிலானது ஆண்டின் மழைக்காலத்தைத் தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் நடைபெறும். இந்த வேலையானது மிகவும் அதிகமான வேலை பளு உடையது. மேலும், மழைக்காலங்களில் சேதமடைந்த உப்பளத்தினை திருத்தி உப்பு உற்பத்திக்கு தயார் செய்ய வேண்டும்.

principal,relief ,முதல்வர் ,நிவாரணம்

இதனால் அதற்கு 4 முதல் 6 வாரம் வரை ஆகும். உப்பு உற்பத்தியில் கிடைக்கும் உபபொருளான ஜிப்சம் இந்த பணிகளின் பொழுதே எடுக்கப்படுகிறது. அந்த நேரத்தில் தொழிலாளர்களுக்கு உப்பு உற்பத்தியின் பொழுது வழங்கும் கூலியை விடக் குறைவான கூலியே வழங்கப்படுகிறது. அதனால் இத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் சிரமத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவியாக இருக்கும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முக்கிய உத்தரவை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன் படி உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். இத்திட்டத்தை தொடங்கிவைக்கும் அடையாளமாக 5 பேருக்கு காசோலைகளை வழங்கினார். மேலும் தமிழ்நாடு உப்பு நிறுவனம் சார்பில் நெய்தல் உப்பு பெயரில் வெளிச்சந்தையில் உப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிவாரணம் உப்பள தொழிலார்களின் குடும்பத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :