Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து மீண்டும் ஆலோசனை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து மீண்டும் ஆலோசனை

By: vaithegi Mon, 03 July 2023 10:42:14 AM

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து மீண்டும் ஆலோசனை

சென்னை : சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். அரசின் முன்னெடுப்பு திட்டங்கள் ஆன முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் என்கிற பெயரில் ஏற்கனவே இது போன்ற கூட்டம் 5 முறை நடைபெற்றிருக்கிறது.

இந்நிலையில் இன்று மீண்டும் 6-வது ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. இதையடுத்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், பல்வேறு அரசுதுறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதில், தமிழக அரசின் திட்டங்கள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டு உள்ளன,

advice,chief minister m.k.stalin ,ஆலோசனை ,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ,

மேலும் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிலைப்பாடுகள் என்ன?, விரைந்து முடிக்கப்படவேண்டிய திட்டங்கள் எவை?, பணிகளை துரிதப்படுத்துவது உள்ளிட்டவை பற்றி இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.

இதற்கு முன்னதாக கடந்த ஜூன் 28-ம் தேதி நடந்த கூட்டத்தில் அரசின் திட்டங்கள் சுனாமி வேகத்தில் முடிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி முதல்வர் உரையாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|