Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்

போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்

By: vaithegi Fri, 12 Aug 2022 11:38:54 AM

போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழகத்தில் போதைப் பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 12) முதல் 19ம் தேதி வரை போதைக்கு எதிரான விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் என அனைத்து பள்ளிகளிலும் காலை 10.30 மணிக்கு மாணவர்கள் அனைவரும் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கத்தில், “போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற திட்டத்தை தமிழக முதல்வர் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இவர் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதாவது, தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க 2 விதமான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இதில் முதல் வழி போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் அத்துடன் விற்பனை செய்பவர்களை கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். அடுத்தது 2வது வழி, போதைப்பொருளால் ஏற்படும் பாதிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

chief minister of tamil nadu,tamil nadu ,தமிழக முதல்வர்,தமிழ்நாடு

மேலும் பள்ளி, கல்வி நிறுவனங்களுக்கு அருகில் போதை பொருட்கள் விற்கப்படுவதை தடுக்க வேண்டும். இதற்கு மிக கடுமையான சட்டங்கள் இயற்றப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் பெற்றோர்கள் பாதி ஆசிரியர்களாகவும், ஆசிரியர்கள் பாதி பெற்றோர்களாவும் இருந்து மாணவ சமுதாயத்தை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இதை அடுத்து போதைப்பொருள் விற்பவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். இதற்காக தனியாக சைபர் செல் உருவாக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனை மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் செய்து முடிக்க வேண்டும். அத்துடன் அவர்களே முழு பொறுப்பவார்கள் எனவும் கூறியுள்ளார்.

Tags :