Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமும் யோகா கற்றுத்தரப்பட உள்ளதாக முதல்வர் தெரிவிப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமும் யோகா கற்றுத்தரப்பட உள்ளதாக முதல்வர் தெரிவிப்பு

By: vaithegi Tue, 21 June 2022 7:35:16 PM

அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமும் யோகா கற்றுத்தரப்பட உள்ளதாக முதல்வர் தெரிவிப்பு

டெல்லி : ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உடலும் உள்ளமும் வலுப்பெற்றிருப்பது மிக அவசியமாகும். நாம் எவ்வளவு தான் சத்தான உணவுகளை உட்கொண்டாலும் அதற்கேற்றது போல உடற்பயிற்சி செய்வது தான் முக்கியம்.

சிறந்த உடற்பயிற்சிகளில் ஒன்று ‘யோகா’ தான் யோகா என்பது ஒன்றிணைத்தல் அல்லது ஒரு முகப்படுத்துதல் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த யோகா பயிற்சியை அன்றாடம் செய்யும் போது, ஹோலிஸ்டிக் ஹெல்த் எனப்படும் தலை முதல் கால் வரை உடலும் மனமும் ஆரோக்கியமடைகிறது. ஹார்மோன் குறைபாடுகள், உடல் சூடு, உடல் சோர்வு, எடை குறைப்பு, கருத்தரிப்பதில் கோளாறு போன்ற அனைத்து வித உடல் பிரச்சனைகளுக்கும் யோகாசனம் மிக சிறந்த தீர்வாக உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. யோகாசனப் பயிற்சிகளின் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்திய பிரதமர் நரேந்தர மோடி, ஐ நா சபையில் யோகாவிற்காக ஒரு நாள் ஒதுக்கப்பட வேண்டும் என்று முன் மொழிந்தார்.

yoga,chief,un council ,யோகா ,முதல்வர் ,ஐ நா சபை

அதையொட்டி, 2014 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபையில் ஜூன் 12 ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து ஆண்டுத்தோறும் ஜூன் 21ம் தேதி யோகா தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று சர்வதேச யோகா தினத்தையொட்டி டெல்லி அரசு சார்பில் யோகாசன நிகழ்ச்சிக்கு தியாராஜ் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் உட்பட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், யோகா பயிற்சி செய்யும் பழக்கம் குழந்தைகளிடம் ஏற்படுத்தப்பட்டால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் அதனுடன் இருப்பார்கள். யோகா பயிற்சி செய்வோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கானோர் என்கிற நிலையில் இருந்து லட்சக்கணக்கானோர் என்கிற நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமும் யோகா கற்றுத்தரப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags :
|
|