Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை

மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை

By: Nagaraj Sat, 28 Nov 2020 08:46:15 AM

மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை

இன்று முதலமைச்சர் ஆலோசனை... டிசம்பர் மாத ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களோடு இன்று முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார்.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், முதலில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்ட மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்தது.

இதன் பின்பு தமிழகத்தில் நவம்பர் 30 -ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நோய்க்கட்டுப்பாடு பகுதி தவிர மற்ற பகுதிகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

in december,relaxations,essential service,control area ,டிசம்பர் மாதம், தளர்வுகள், அத்தியாவசிய சேவை, கட்டுப்பாட்டு பகுதி

இதனிடையே வரும் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 31 -ஆம் தேதி வரை பின்பற்றக் கூடிய புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. அதாவது, வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு, கட்டுப்பாட்டு பகுதிகள் மாவட்ட அதிகாரிகளால் கவனமுடன் வரையறுக்கப்படுவதை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் உறுதி செய்ய வேண்டும்.

இந்தக் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் மாத ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களோடு இன்று முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார்.

இந்த ஆலோசனையில் மேலும் தளர்வுகள் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :