Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • துணை முதல்வர் வீட்டிற்கு அமைச்சர்களுடன் வருகை தந்த முதல்வர்

துணை முதல்வர் வீட்டிற்கு அமைச்சர்களுடன் வருகை தந்த முதல்வர்

By: Nagaraj Wed, 07 Oct 2020 8:20:21 PM

துணை முதல்வர் வீட்டிற்கு அமைச்சர்களுடன் வருகை தந்த முதல்வர்

துணை முதல்வர் வீட்டில் முதல்வர்... தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததற்கு நன்றி தெரிவிக்க முதல்வர் பழனிசாமி , துணை முதல்வர் பன்னீர் செல்வம் வீட்டிற்கு வருகை தந்தார்.

வர இருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., முதல்வர் வேட்பாளராக முதல்வர் பழனிசாமி அறிவிக்கப்பட்டார். அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முறைப்படி அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள துணை முதல்வர் பன்னீர்செல்வம் இல்லத்திற்கு முதல்வர் பழனிசாமி வருகை தந்தார்.

deputy chief minister,house,chief minister,thanked,ministers ,துணை முதல்வர், வீடு, முதல்வர், நன்றி கூறினார், அமைச்சர்கள்

அவரை துணை முதல்வர் பன்னீர்செல்வம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி தொகுதி எம்.பி.,யுமான ரவீந்திரநாத் முதல்வர் பழனிசாமியிடம் ஆசி பெற்றார். சந்திப்பின்போது தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்து கொண்டார்.

அவருடன் வழிகாட்டுதல் குழுவின் 11 உறுப்பினர்களான அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி , சி.வி.சண்முகம் மற்றும் வைத்திலிங்கம், முனுசாமி, மனோஜ் பாண்டியன், ப.மோகன், மாணிக்கம் ஆகியோர் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்தனர்.

Tags :
|