Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தலைமை நீதிபதியின் ஆலோசனைக்கு வரவேற்பு தெரிவித்த முதல்வர்

தலைமை நீதிபதியின் ஆலோசனைக்கு வரவேற்பு தெரிவித்த முதல்வர்

By: Nagaraj Mon, 23 Jan 2023 6:39:55 PM

தலைமை நீதிபதியின் ஆலோசனைக்கு வரவேற்பு தெரிவித்த முதல்வர்

சென்னை: அனைத்து இந்திய மொழிகளிலும் தீர்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற தலைமை நீதிபதியின் ஆலோசனையை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதேபோல் பிரதமரும் இந்த கருத்துக்கு வரவேற்பு தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.


மகாராஷ்டிரா, கோவா வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் கலந்து கொண்டார். இதையடுத்து பேசிய அவர் , உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என கூறினார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்துக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.உச்சநீதிமன்ற தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் கிடைக்க வேண்டிய அவசியத்தை தலைமை நீதிபதி எடுத்துரைத்தார்.

chief minister,supreme court judgments ,முதலமைச்சர் ,உச்சநீதிமன்றம், தீர்ப்புகள்

எனவே இதற்கான தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தலாம் என்றும் அவரது கருத்து பாராட்டத்தக்கது என்று பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் கூறியுள்ளனர்.


இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அனைத்து இந்திய மொழிகளிலும் SC தீர்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற தலைமை நீதிபதியின் ஆலோசனையை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன்.

இது உயர் நீதிமன்றங்களில் மாநில அலுவல் மொழிகளைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற நமது நீண்டகாலக் கோரிக்கை, நமது நாட்டின் சாமானிய மக்களுக்கு நீதியை நெருங்கச் செய்யும் , மக்கள் பயன்பெறுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags :