Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதல்வர் வர்றார்... மாநகராட்சி தூய்மையாக இருக்கணும்; வேலூர் மேயர் உத்தரவு

முதல்வர் வர்றார்... மாநகராட்சி தூய்மையாக இருக்கணும்; வேலூர் மேயர் உத்தரவு

By: Nagaraj Mon, 30 Jan 2023 11:29:01 PM

முதல்வர் வர்றார்... மாநகராட்சி தூய்மையாக இருக்கணும்; வேலூர் மேயர் உத்தரவு

வேலூர்: மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். சாலையோரங்களில் மண், மணல், எம்-சாண்ட், தேங்காய் மட்டைகள் இருந்தால், அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று வேலூர் மாநகராட்சி மேயர் அறிவுறுத்தி உள்ளார்.

பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (புதன்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வேலூர் மாவட்டம் வருகிறார்.

இந்நிலையில், வேலூர் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் முன்னேற்றப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. துணை மேயர் சுனில்குமார், கமிஷனர் அசோகுமார், மண்டல குழு தலைவர்கள் நரேந்திரன், யூசுப்கான் முன்னிலை வகித்தனர். உதவி கமிஷனர் செந்தில்குமார் வரவேற்றார்.

கூட்டத்துக்கு வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா தலைமை வகித்து பேசியதாவது:- வேலூர் மாநகராட்சி பகுதிகளில் 2 நாட்கள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

chief minister m. k. stalin,mayor,municipal corporation,sujata,vellore, ,சுஜாதா, மாநகராட்சி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மேயர், வேலூர்

எனவே மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். சாலையோரங்களில் மண், மணல், எம்-சாண்ட், தேங்காய் மட்டைகள் இருந்தால், அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மாநகராட்சி பகுதியில் வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பர போர்டுகளையும் அகற்ற வேண்டும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் சாலைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மாநகராட்சி அலுவலகம், மண்டல அலுவலகங்களில் முதல்வர் திடீரென ஆய்வு நடத்த வாய்ப்புள்ளது. எனவே, நகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் முழுமையாக கையில் வைத்திருக்க வேண்டும். சாலைகளில் கால்நடைகள் நடமாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மாடுகளை சாலையில் அவிழ்த்து விடக்கூடாது என்று அவற்றின் உரிமையாளர்களிடம் எழுதி வாங்க வேண்டும். அதையும் மீறி கால்நடைகளை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்க வேண்டும் என மேயர் கூறினார். இதில், மாநகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன், நகராட்சி சுகாதார அலுவலர் கணேஷ், உதவி கமிஷனர்கள், சுகாதார அலுவலர்கள், இளநிலை பொறியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags :
|
|