Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகளிர் உரிமைத்தொகை வழங்குவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை

மகளிர் உரிமைத்தொகை வழங்குவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை

By: vaithegi Thu, 06 July 2023 09:47:51 AM

மகளிர் உரிமைத்தொகை வழங்குவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை


சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு உரிமை தொகை என்ற அடிப்படையில் மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மகளிர் உரிமை தொகை என்பது 2 நோக்கங்களை கொண்டது எனவும் குடும்ப தலைவிகளின் உழைப்பை அங்கீகரிக்கவே மகளிர் உரிமை திட்டம் எனவும் பெண்களின் வங்கி கணக்கில் மகளிர் உரிமை தொகையை செலுத்தப்படும் என்றும் சமீபத்தில் சட்டப்பேரவையில் முதல்வர் மு. க. ஸ்டாலின் கூறியிருந்தார்.

எனவே இதன் மூலம் மீனவப் பெண்கள் ,சிறு கடை வைத்திருக்கும் பெண்கள் ,ஒரே நாளில் பல்வேறு இடங்களில் பணிபுரியும் பெண்கள் ,கட்டிட பணியாளர்கள் ,சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் பெண்கள் என பலர் பயனடைவர் எனவும் தெரிவிக்கப்பட்டுயிருந்தது.

chief minister,womens rights fund ,முதலமைச்சர் ,மகளிர் உரிமைத்தொகை

இதனை அடுத்து அதன்படி வருகிற செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் முதல் குடும்பத்தலைவியருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்பட இருக்கிறது என அண்மையில் தான் முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை வழங்குவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். இதற்கு முன்னதாக கடந்த மாதம் 25-ம் தேதி மகளிர் உரிமைத்தொகை வழங்குவது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியது.

Tags :