Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திரைப்பட படப்பிடிப்பு அனுமதி குறித்து முதல்வர் முடிவெடுப்பார்

திரைப்பட படப்பிடிப்பு அனுமதி குறித்து முதல்வர் முடிவெடுப்பார்

By: Nagaraj Wed, 12 Aug 2020 6:52:58 PM

திரைப்பட படப்பிடிப்பு அனுமதி குறித்து முதல்வர் முடிவெடுப்பார்

திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி அளிப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தேர்தலுக்கு அவசரமில்லை. தற்போது நாட்டின் மிகப்பெரிய பேரிடர் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நம் மக்களை காக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. எங்கள் கவனம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு அதில் இருந்து மக்களை காப்பது தான்.

shooting,film,welfare,end,situation ,படப்பிடிப்பு, திரைப்படம், நலவாரியம், முடிவு, சூழ்நிலை

தேர்தலை பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை. தேர்தல் வரும்போது மக்கள் நல்ல முடிவு எடுப்பார்கள். மேலும், சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் பல்வேறு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவனத்திற்கு கொண்டு சென்று, திரைத்துறை நலவாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

படப்பிடிப்பு முடிக்கப்பட்ட படங்கள் இறுதி கட்ட பணிகளை செய்ய ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டது. சின்னத்திரை படப்பிடிப்பில் அறுபது பேர் வரை கலந்து கொள்ளலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. அது பெரும்பாலும் உள் அரங்கில் நடைபெறும். ஆனால் திரைப்படம் படப்பிடிப்புகள் திறந்தவெளியில், பொது இடங்களில் நடைபெறும்.

அதனால், மக்கள் அதிக கூட வாய்ப்புள்ளது. இனி வரும் சூழ்நிலையில் கருத்தில் கொண்டு திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி அளிப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார் எனக் கூறினார்.

Tags :
|
|