Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை

நாளை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை

By: vaithegi Thu, 18 May 2023 10:27:54 AM

நாளை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை

சென்னை: கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் நாளை ஆலோசனை .... கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி 1924-ம் ஆண்டு ஜூன் 3-ம் நாள் திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் பிறந்தார். அவரது நூற்றாண்டு விழா வருகிற ஜூன் 3ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து இந்த விழாவை சிறப்பாக கொண்டாட திமுக திட்டமிட்டுள்ளது.

chief minister,ministers ,முதலமைச்சர் ,அமைச்சர்கள்

கருணாநிதி பிறந்தநாளை அனைத்து வார்டு பகுதிகளிலும் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

எனவே கருணாநிதி நூற்றாண்டு விழா தொடர்பாக விவாதிக்க வருகிற 20ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை மேற்கொள்கிறது. இந்நிலையில், கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.

Tags :