Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 'வானவில் மன்றம்' திட்டம் ... முதல்வர் இன்று தொடங்கிவைக்கிறார்

'வானவில் மன்றம்' திட்டம் ... முதல்வர் இன்று தொடங்கிவைக்கிறார்

By: vaithegi Mon, 28 Nov 2022 06:52:15 AM

'வானவில் மன்றம்' திட்டம் ... முதல்வர் இன்று தொடங்கிவைக்கிறார்

திருச்சி: 'வானவில் மன்றம்' திட்டம் ... முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மற்றும் அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இதனை அடுத்து இதற்காக இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, காலை 9.50 மணிக்கு அவர் திருச்சி விமான நிலையத்தை வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு, காலை 10.30 மணிக்கு திருச்சி காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு செல்கிறார்.

principal,tour ,முதல்வர் ,சுற்றுப்பயணம்

அங்கு, அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ரூ.25 கோடி செலவில் 'வானவில் மன்றம்' திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

அதன் பின்னர், நடமாடும் அறிவியல் ஆய்வக வாகனத்தையும், மோட்டார் சைக்கிள்களில் பயிற்சி அளிக்க செல்லும் தன்னார்வலர்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வழி அனுப்பி வைக்கிறார்.நிகழ்ச்சி முடிந்ததும், திருச்சியில் இருந்து பெரம்பலூருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு செல்கிறார்.

Tags :