Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் இன்று மாலை நடக்கும் வள்ளலார் ஓராண்டு நிறைவு விழாவில் முதல்வர் பங்கேற்பு

சென்னையில் இன்று மாலை நடக்கும் வள்ளலார் ஓராண்டு நிறைவு விழாவில் முதல்வர் பங்கேற்பு

By: Nagaraj Thu, 05 Oct 2023 2:09:18 PM

சென்னையில் இன்று மாலை நடக்கும் வள்ளலார் ஓராண்டு நிறைவு விழாவில் முதல்வர் பங்கேற்பு

சென்னை: முதல்வர் பங்கேற்கிறார்... சென்னையில் இன்று நடைபெறும் வள்ளலார்-200 ஓராண்டு நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று (வியாழக்கிழமை) மாலையில் "வள்ளலார்-200" ஓராண்டு தொடர் அறநிகழ்வின் நிறைவு விழா நடைபெறுகிறது.

இவ்விழாவில், 52 வாரங்கள் முப்பெரும் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தியமைக்காக சிறப்பு குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டுக்கள் தெரிவித்து பேசுகிறார்.

principal,participation,vallalar,closing ceremony,appreciation ,முதல்வர், பங்கேற்பு, வள்ளலார், நிறைவு விழா, பாராட்டுக்கள்

மேலும் வள்ளலார் சிறப்பு புகைப்பட கண்காட்சி மற்றும் அன்னதானத்தை தொடங்கி வைக்க உள்ளார். "வள்ளலார்-200"-ன் முதல் நிகழ்ச்சியாக, 5.10.2022 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், வள்ளலார் முப்பெரும் விழாவை தொடங்கி வைக்கும் வகையில், "வள்ளலார்-200" முப்பெரும் விழா இலச்சினை, தபால் உறை மற்றும் சிறப்பு மலர் ஆகியவற்றை வெளியிட்டு, 52 வாரங்களுக்கான விழாக்களில் முதல் வார நிகழ்ச்சிகளையும், ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்வையும் தொடங்கிவைத்தார்.

"வள்ளலார்-200" ஓராண்டு தொடர் அறநிகழ்வின் நிறைவு விழா சென்னையிலும், வடலூரிலும் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விழாவில் அமைச்சர்கள், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிகர், குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞானபாலய தேசிகர், வேளாக்குறிச்சி ஆதீனம் சத்திய ஞான மகாதேவ் சுவாமிகள், சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க தேசிகர், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :