Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராணுவத்திற்கு 1.55 லட்சம் கோடி யுவான் ஒதுக்கீடு செய்த சீன அரசு

ராணுவத்திற்கு 1.55 லட்சம் கோடி யுவான் ஒதுக்கீடு செய்த சீன அரசு

By: Nagaraj Mon, 06 Mar 2023 10:27:38 PM

ராணுவத்திற்கு 1.55 லட்சம் கோடி யுவான் ஒதுக்கீடு செய்த சீன அரசு

பெய்ஜிங்: ராணுவத்திற்கான சீன அரசின் நிதி ஒதுக்கீடு... சீன அரசு ராணுவத்துக்கு கடந்த ஆண்டு 1.45 லட்சம் கோடி யுவான் (ரூ.17.22 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில், சீனா இந்த ஆண்டு 1.55 லட்சம் கோடி யுவான் (ரூ.18.45 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்துள்ளது.

லடாக் எல்லைப் பகுதி தொடர்பாக இந்தியாவுடன் சீனா பகைத்து வருகிறது. ஜூன் 2020 இல், லடாக் எல்லையில் இந்திய மற்றும் சீன ராணுவங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.

america,border,china , சீனா, ராணுவ பட்ஜெட், லடாக் எல்லை

இந்த சம்பவத்திற்குப் பிறகு, லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவம் ராணுவக் கட்டமைப்பை பலப்படுத்தத் தொடங்கியது. சீனாவும் அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. மேலும், தைவானியர்களை நாட்டிற்குள் இணைக்கும் முயற்சியை சீனா தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் சீனா தனது ராணுவ பட்ஜெட்டை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கும் நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா முதலிடத்திலும், சீனா அடுத்த இடத்திலும் உள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான ராணுவத்துக்கு அமெரிக்கா 816 பில்லியன் டாலர்கள் (ரூ.66.91 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தியா 2023-24ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ரூ.5.94 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது.

Tags :
|