Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீன அரசு முதன்முறையாக அறிவிப்பு... கொரோனாவால் 60 ஆயிரம் பேர் பலி

சீன அரசு முதன்முறையாக அறிவிப்பு... கொரோனாவால் 60 ஆயிரம் பேர் பலி

By: Nagaraj Sun, 15 Jan 2023 3:12:42 PM

சீன அரசு முதன்முறையாக அறிவிப்பு... கொரோனாவால் 60 ஆயிரம் பேர் பலி

சீனா: அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு... கோவிட் தொடர்பான இறப்பு எண்ணிக்கை சுமார் 60 ஆயிரம் என்று சீன அரசு முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 7ம் தேதி கட்டுப்பாடுகளை சீனா தளர்த்திய பின்னர் கோவிட் வேகமாகப் பரவத் தொடங்கியது.. தினமும் 5 அல்லது 10 பேர் மட்டுமே உயிரிழப்பு என்று சீனா உண்மைகளை மூடி மறைப்பதாக உலக சுகாதார அமைப்பு முதல் பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தது.

china,health,corona,death,notification,count ,சீனா, சுகாதாரம், கொரோனா, சாவு, அறிவிப்பு, எண்ணிக்கை

இந்நிலையில் நேற்று சீனாவின் தேசிய சுகாதார கமிஷன் டிசம்பர் 8 முதல் ஜனவரி 12 வரை கிட்டதட்ட 60 ஆயிரம் பேர் கோவிட்டால் உயிரிழந்து விட்டதாக அறிவித்துள்ளது. தற்போதுதான் முதன்முறையாக சீனா இப்படி அறிவித்துள்ளது என்று விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் இந்த தகவல் முழுமையானது இல்லை என்றும் தெரிவிக்கின்றனர். இதனால் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கையை முழுமையாக வெளியிட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

Tags :
|
|
|
|