Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபடுகிறது; அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர் குற்றச்சாட்டு

சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபடுகிறது; அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர் குற்றச்சாட்டு

By: Nagaraj Mon, 21 Sept 2020 9:51:48 PM

சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபடுகிறது; அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர் குற்றச்சாட்டு

சீன ராணுவம் அத்துமீறல்... ''எல்லை பகுதியில் கண்காணிப்பை பலப்படுத்த இந்தியா மேற்கொள்ளும் கட்டமைப்பு பணிகளை தடுத்து நிறுத்துவதற்காகவே, சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபடுகிறது,'' என, அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:சீனாவுடனான எல்லை பகுதியில் கண்காணிப்பை பலப்படுத்துவதற்காக, இந்திய அரசு, பல்வேறு கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

chinese military,indictment,encroachment,in orani ,சீன ராணுவம், குற்றச்சாட்டு, அத்துமீறல், ஓரணியில்

இந்தப் பணிகளால், தங்கள் ஆதிக்கத்துக்கு பாதிப்பு ஏற்படும் என சீனா கருதுகிறது. இதனால், கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக, எல்லை பகுதியில் சீன ராணுவம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடுகிறது. சீன ராணுவம், தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே கட்டமைப்பு பணிகளை முடித்து விட்டது.

ஆனால், இந்திய ராணுவம் கட்டமைப்பு பணிகளை துவக்குவதற்கு, சீனா எதிர்ப்பு தெரிவித்து, தாக்குதலில் ஈடுபடுகிறது.நல்ல நட்புறவுடன் கூடிய அண்டை நாடாக செயல்பட சீனா மறுக்கிறது. சீனாவுக்கு எதிராக, அதன் மற்ற அண்டை நாடுகள் எல்லாம் ஓரணியில் திரளுவதற்கு இது தான் சரியான நேரம். இவ்வாறு, அவர் கூறினார்.

Tags :