Advertisement

வரும் 20ம் தேதி ரஷ்யாவுக்கு செல்கிறார் சீன அதிபர்

By: Nagaraj Sat, 18 Mar 2023 11:32:54 AM

வரும் 20ம் தேதி ரஷ்யாவுக்கு செல்கிறார் சீன அதிபர்

சீனா: வரும் 20ம் தேதி ரஷ்யாவுக்கு செல்கிறார் சீன அதிபர் ஷி ஜின்பிங். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் தெரிய வந்துள்ளது.

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக நாளை மறுநாள் 20ம் தேதி ரஷ்யா செல்லும் சீன அதிபர் ஷி ஜின்பிங், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

russian president,cooperation,negotiations,ukraine,statement,war ,ரஷ்ய அதிபர், ஒத்துழைப்பு, பேச்சுவார்த்தை, உக்ரைன், அறிக்கை, போர்

இதுதொடர்பாக ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது

சர்வதேச அரங்கில் ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான கூட்டாண்மை, வியூக ரீதியான ஒத்துழைப்பு ஆகியவை குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசிக்க இருப்பதாகவும், முக்கிய இருதரப்பு ஆவணங்களில் ரஷ்ய அதிபர் புடினும், ஷி-யும் கையெழுத்திட உள்ளார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :