Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சவப்பெட்டியை குடும்பத்தினரே வழங்க வேண்டும்; சுகாதார அமைச்சர் தகவல்

சவப்பெட்டியை குடும்பத்தினரே வழங்க வேண்டும்; சுகாதார அமைச்சர் தகவல்

By: Nagaraj Wed, 25 Nov 2020 8:57:53 PM

சவப்பெட்டியை குடும்பத்தினரே வழங்க வேண்டும்; சுகாதார அமைச்சர் தகவல்

அமைச்சர் தகவல்... கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களை தகனம் செய்வதற்கான சவப் பெட்டியினை அவர்களது குடும்ப உறுப்பினர்களே வழங்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர் தெரிவித்துள்ளதாவது:

கொரோனா காரணமாக மரணிப்போருக்கான சவப்பெட்டிகள் அவர்களது குடும்பத்தினரால் வழங்கப்பட வேண்டும். உயிரிழக்கும் நபர் ஒருவருக்கான சவப்பெட்டியை தெரிவு செய்வது அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் எனவும் அதற்கான செலவினை அவர்கள் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

corona,coffin,dead person,minister,information ,கொரோனா, சவப்பெட்டி, இறந்த நபர், அமைச்சர், தகவல்

எவ்வாறெனினும், சவப்பெட்டிக்கான செலவினை செய்ய முடியாத குடும்பத்தினர் அது குறித்து அறிவித்தால் யாரேனும் கெடையாளர்களிடம் அனுசரணை பெற்றுக்கொள்ள தாம் முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐ.டி.எச் மருத்துவமனையில் இறந்த நபர் ஒருவரை தகனம் செய்ய ஒரு குடும்பத்தில் இருந்து ரூ .58,000 வசூலிக்கப்பட்டதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஹ்மான் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|