Advertisement

8 மாதங்களுக்கு பின்னர் கல்லூரிகள் திறக்கப்பட்டன

By: Nagaraj Tue, 25 Aug 2020 10:08:37 PM

8 மாதங்களுக்கு பின்னர் கல்லூரிகள் திறக்கப்பட்டன

கல்லூரிகள் திறப்பு... கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டதை தொடர்ந்து சீனாவின் வூஹான் மாகாணத்தில் சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டன.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் உள்ள ஒரு இறைச்சி சந்தையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் முதல் முதலாக டிசம்பர் மாத இறுதியில் வூஹானில் இந்த வைரஸ் கண்டறியப்பட்ட காலம் முதல் மார்ச் மாதம் வரை அங்கு மட்டுமின்றி அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த வைரஸ் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து சீனாவில் மார்ச் மாத இறுதியில் வைரஸ் பாதிப்பு பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டன. இதனை அடுத்து அங்கு ஏப்ரல் மாதம் முதல் இயல்பு நிலை திரும்பியது. இருப்பினும் நோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்ட வூஹானில் பள்ளிக் கல்லூரிகள் திறக்கப்படாமால் இருந்து வந்தன. மேலும் வூஹான் நகர மக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் அரசு உத்தரவிட்டிருந்தது.

university,corona,opening of colleges,students ,பல்கலைக்கழகம், கொரோனா, கல்லூரிகள் திறப்பு, மாணவர்கள்

இந்நிலையில் அங்கு பாதிப்புகள் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டதை தொடர்ந்து சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு அங்கு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டுள்ளன. நேற்றைய நிலவரப்படி, சீனாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து 9,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வுஹான் பல்கலைக்கழகத்திற்கு திரும்பியுள்ளதாக அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா இன்று தெரிவித்துள்ளது.

மேலும் 20,000 மாணவர்கள் விரைவில் திரும்புவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. கல்லூரிக்கு திரும்பும் மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதும் தனக்கு கொரோனா இல்லை என்பதை உறுதி செய்யும் சுகாதாரச் சான்று ஆகியவை வைத்திருப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது சீன நிலப்பகுதிக்கு வெளியே உள்ள இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளை சேர்ந்த மாணவர்கள் தங்கள் பல்கலைக்கழகங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்படவில்லை என்று பல்கலைக்கழக மாணவர் விவகாரத் துறையின் துணை அமைச்சர் லி கின், தெரிவித்துள்ளார்.

Tags :
|