Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தென்காசி வருகிற 31ம் தேதி உள்ளூர் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது

தென்காசி வருகிற 31ம் தேதி உள்ளூர் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது

By: vaithegi Tue, 25 July 2023 10:00:21 AM

தென்காசி வருகிற 31ம் தேதி உள்ளூர் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது

தென்காசி : ஆடித்தபசு திருநாளை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தில் வருகிற 31-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு ... ஆடி மாதம் என்றாலே அது அம்மனுக்கு உகந்த மாதம் என்று சொல்வதுண்டு. அந்த அளவுக்கு ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களும் விசேஷமான ஒன்றாக காட்சியளிக்கும். அதேபோன்று ஆடி மாதத்தில்தான் அம்மன் கோவில் திருவிழாக்கள் நடைபெறும்.

அந்த வகையில் தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் அமைந்து உள்ளது பிரசித்தி பெற்ற கோமதி அம்மன் கோயில். ஆடி மாதத்தில், சங்கரன்கோவில் கோமதி அம்மன் புன்னைவன காட்டில் தவம் இருந்தார்.

local holiday,tenkasi ,உள்ளூர் விடுமுறை ,தென்காசி

இறைவன் ஒருவனே என்பதை உலகுக்கு உணர்த்தும் விதத்தில் அவர் மேற்கொண்ட தவத்தின் பயனாக, ஆடி மாதம் உத்திராட நட்சத்திரம் அன்று, தவம் இருக்கும் கோமதிக்கு அம்மனுக்கு சங்கரநாராயணன் காட்சியளித்தார். இதையடுத்து இந்த நிகழ்வு அங்கு ஆடித்தபசு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி, தென்காசி மாவட்டத்தில் வருகிற 31ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே இதனை ஈடுசெய்யும் வகையில் வருகிற 19ம் தேதி வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

Tags :