Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எல்லைப்பிரச்னையில் ஒருமித்த முடிவை நடைமுறைப்படுத்த வேண்டும்; சீனா வலியுறுத்தல்

எல்லைப்பிரச்னையில் ஒருமித்த முடிவை நடைமுறைப்படுத்த வேண்டும்; சீனா வலியுறுத்தல்

By: Nagaraj Tue, 09 June 2020 4:34:10 PM

எல்லைப்பிரச்னையில் ஒருமித்த முடிவை நடைமுறைப்படுத்த வேண்டும்; சீனா வலியுறுத்தல்

ஒருமித்த முடிவை நடைமுறைப்படுத்தணும்... 'இந்தியா - சீனா எல்லை பிரச்னைக்கு சுமுக தீர்வு காண, இரு நாட்டு தலைவர்களுக்கு இடையே எடுக்கப்பட்ட ஒருமித்த முடிவை நடைமுறைப்படுத்த வேண்டும்' என, சீனா தெரிவித்துள்ளது.

இந்திய - சீன எல்லையில் சமீப காலமாக பதற்றம் நிலவி வருகிறது. சீனாவின் ராணுவ வீரர்கள், நம் எல்லைக்கு அருகில் அத்துமீறி கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். நம் வீரர்கள் பதிலடி கொடுத்ததை அடுத்து, எல்லையில் இரு நாட்டு வீரர்களும் குவிக்கப்பட்டனர். எல்லையில் அசாதாரண சூழல் நிலவியதை அடுத்து, இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே, நேற்று முன்தினம் நீண்ட நேரம் பேச்சு நடந்தது.

இதுகுறித்து, சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹுவா சுனியிங் கூறியதாவது: இந்திய - சீன எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைப்பதற்காக, இரு நாட்டு துாதரக அதிகாரிகள், முதலில் பேச்சு நடத்தினர்.

social context,border,status,confinement,china,india ,
சமூகமான சூழல், எல்லை, நிலைமை, கட்டுக்குள், சீனா, இந்தியா

அதற்கு பின், ராணுவ அதிகாரிகளிடையே பேச்சு நடந்தது.இதில், எல்லையில் ஏற்படும் பிரச்னை குறித்து, விரிவாக விவாதிக்கப்பட்டது.
சீன அதிபர் ஜின்பிங்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், எல்லை பிரச்னைக்கு சுமுக தீர்வு காண, ஏற்கனவே நடத்திய பேச்சின் போது, ஒருமித்த முடிவை எடுத்தனர்.
இந்த ஒருமித்த முடிவை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மட்டுமே, எல்லையில் பதற்றத்தை குறைத்து, அமைதியை ஏற்படுத்த முடியும். இரு தரப்புமே, எல்லையில் அமைதியை பின்பற்ற வேண்டும்.

பதற்றத்தை குறைத்து, சுமுகமான சூழலை உருவாக்க வேண்டும்.தற்போது, எல்லையில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. இரு தரப்புமே பேச்சை தொடர்வதற்கு தயாராக உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

social context,border,status,confinement,china,india ,
சமூகமான சூழல், எல்லை, நிலைமை, கட்டுக்குள், சீனா, இந்தியா

சீன அரசு பேச்சு நடத்தி வந்தாலும், மற்றொரு புறம், சீன ராணுவம் தீவிரமான போர் பயிற்சியில் ஈடுபட்டதாக, அந்த நாட்டு பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணத்தில் இருந்து, ஏராளமான போர் தளவாடங்கள், போர் விமானங்களுடன், ஆயிரக்கணக்கான வீரர்கள் ரகசியமான இடத்துக்கு சென்று, பிரமாண்டமான போர் பயிற்சியில் ஈடுபட்டதாக, அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போர் பயிற்சி வெற்றிகரமாக முடிவடைந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|
|