- வீடு›
- செய்திகள்›
- கால்பந்தாட்ட போட்டியில் பிளாஸ்டிக் பொம்மைகளை ரசிகைகளாக நிறுத்திய விவகாரம் சர்ச்சையானது
கால்பந்தாட்ட போட்டியில் பிளாஸ்டிக் பொம்மைகளை ரசிகைகளாக நிறுத்திய விவகாரம் சர்ச்சையானது
By: Nagaraj Tue, 19 May 2020 2:21:44 PM
சர்ச்சையை கிளப்பிய பிளாஸ்டிக் பொம்மைகள்... தென் கொரியாவில் நடந்த கால்பந்து போட்டியில் பிளாஸ்டிக் பொம்மைகளை ரசிகைகளாக பயன்படுத்தியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
தென் கொரியாவில் நடக்கும் 'கே-லீக்' கால்பந்து தொடர் 'கொரோனா' காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. கடந்த மே 8ல் இத்தொடர் மீண்டும் துவங்கியது. சமீபத்தில் சியோலில் நடந்த போட்டியில் எப்.சி., சியோல் 1-0 என்ற கோல் கணக்கில் குவாங்ஜு எப்.சி., அணியை வீழ்த்தியது.
கொரோனா அச்சம் காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், இப்போட்டியில் சியோல் அணி சார்பில் பிளாஸ்டிக் பொம்மைகள் ரசிகைகளாக பயன்படுத்தப்பட்டது. ஆனால் இது பாலியல் பொம்மைகள் என்று எதிர்ப்புகள் கிளம்பின. ரசிகர் ஒருவர் கூறுகையில், ''இந்த வினோதமான யோசனை இவர்களுக்கு எப்படி வந்தது என்று ஆச்சர்யமாக உள்ளது. இது ஒரு சர்வதேச அவமானம்,'' என்றார்.
இதற்கு வருத்தம் தெரிவித்து எப்.சி., சியோல் அணி வெளியிட்ட அறிக்கையில், ''ரசிகர்களுக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியதற்காக நாங்கள் உண்மையிலேயே வருந்துகிறோம். இந்த பிளாஸ்டிக் பொம்மைகளுக்கும், பாலியல் பொம்மைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை துவக்கத்தில் இருந்தே உறுதிப்படுத்தி உள்ளோம்,'' என, தெரிவிக்கப்பட்டது.