Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலுக்கு 2.25 கோடி பேர் பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலுக்கு 2.25 கோடி பேர் பாதிப்பு

By: Karunakaran Thu, 20 Aug 2020 3:33:12 PM

உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலுக்கு 2.25 கோடி பேர் பாதிப்பு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளது. கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும், நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

தற்போது, உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.25 கோடியைத் தாண்டியுள்ளது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 7.87 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

corona attack,world,corona virus,corona prevalence ,கொரோனா தாக்குதல், உலகம், கொரோனா வைரஸ், கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக 1.52 கோடி பேர் சிகிச்சைக்குப்பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா சிகிச்சை பெறுபவர்களில் 62 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா, பிரேசில், இந்தியா அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவை தற்போது கொரோனா பரவலை தடுக்க வலியுறுத்தபடுகிறது.

Tags :
|