Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 1464 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 1464 பேர் உயிரிழப்பு

By: Karunakaran Fri, 31 July 2020 12:03:20 PM

அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 1464 பேர் உயிரிழப்பு

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.74 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா காரணமாக உலகம் முழுவதும் இதுவரை 6.75 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 66 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

united states,corona prevalence,corona virus,corona death ,அமெரிக்கா, கொரோனா பாதிப்பு, கொரோனா வைரஸ், கொரோனா மரணம்

தற்போது அமெரிக்காவில் ஒரே நாளில் 1464 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1.44 லட்சத்தை கடந்துள்ளது. மேலும், அமெரிக்காவில் ஒரே நாளில் மீண்டும் 68 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இதுவரை கொரோனா காரணமாக பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 46.34 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும் அங்கு 22.83 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பில் பிரேசில், இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

Tags :