Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடந்தாண்டு ஆகஸ்டு முதலே கொரோனா பரவ துவங்கியிருக்கலாம்; ஹார்வர்டு பல்கலைக்குழு கருத்து

கடந்தாண்டு ஆகஸ்டு முதலே கொரோனா பரவ துவங்கியிருக்கலாம்; ஹார்வர்டு பல்கலைக்குழு கருத்து

By: Nagaraj Tue, 09 June 2020 8:59:24 PM

கடந்தாண்டு ஆகஸ்டு முதலே கொரோனா பரவ துவங்கியிருக்கலாம்; ஹார்வர்டு பல்கலைக்குழு கருத்து

சீனா நிராகரிப்பு...சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் முதலே பரவ துவங்கியிருக்கலாமென ஹார்வர்டு ஆராய்ச்சி குழு கண்டறிந்துள்ளது. ஆனால் இதனை அபத்தமானது என சீனா நிராகரித்துள்ளது.

சீனாவின் வூஹானில் உள்ள மருத்துவமனைகளில் வாகன நிறுத்துமிடங்களின் சாட்டிலைட் புகைப்படம் மற்றும் தேடுபொறிகளில் மக்களின் இருமல், வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறி தொடர்பான தேடுதல் தரவுகள் ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டது. 2019ம் ஆண்டு டிசம்பரில் வூஹானில் மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்து, கோவிட் வைரஸ் தொடர்பான அறிகுறிகள் அதிகம் தேடப்பட்டு இருப்பதும் ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டது.

harvard,research committee,corona,august,rejection ,ஹார்வர்டு, ஆராய்ச்சிக்குழு, கொரோனா, ஆகஸ்ட் மாதம், நிராகரிப்பு

ஹார்வர்டு ஆராய்ச்சி குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
'மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தது புதிய கொரோனா வைரஸ் தொற்றுடன் தொடர்புடையது என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் வூஹானில் உள்ள மாமிச சந்தைக்கு முன்னதாகவே கொரோனா தொற்று தோன்றி இருக்கலாமென்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது. இந்த கண்டுபிடிப்புகள் தெற்கு சீனாவில் இயற்கையாகவே கொரோனா தோன்றியிருக்க கூடும்.

வூஹானுக்கு முன்னதாகவே கொரோனா பரவியிருப்பதை உறுதிப்படுத்துகிறது. இந்த ஆராய்ச்சியில் 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மருத்துவமனைகளில் கார் நிறுத்துமிடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.மேலும் ஆகஸ்ட் மாதத்தில், வயிற்றுப்போக்கு தொடர்பான தேடல்களில் ஒரு தனித்துவமான அதிகரிப்பு இருப்பதை அடையாளம் கண்டோம். இது முந்தைய காய்ச்சல் பருவங்களில் காணப்படவில்லை அல்லது இருமல் தேடல் தரவுகளில் பிரதிபலிக்கவில்லை' எனவும் கூறப்பட்டுள்ளது.

ஹார்வர்டு ஆராய்ச்சி குழுவின் ஆராய்ச்சி குறித்து செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங், 'போக்குவரத்து அளவு போன்ற மேலோட்டமான அவதானிப்புகளின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வருவது நகைப்புக்குரியது. நம்பமுடியாத அபத்தமானது என்று நினைக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

Tags :
|
|