Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அளிக்கப்பட்டு வந்த கொரோனா சிகிச்சை முடிவடைந்தது - வெள்ளை மாளிகை

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அளிக்கப்பட்டு வந்த கொரோனா சிகிச்சை முடிவடைந்தது - வெள்ளை மாளிகை

By: Karunakaran Sat, 10 Oct 2020 3:21:07 PM

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அளிக்கப்பட்டு வந்த கொரோனா சிகிச்சை முடிவடைந்தது - வெள்ளை மாளிகை

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 3-ந்தேதி தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. ஜனாதிபதி டிரம்புக்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த 1-ந்தேதி உறுதிசெய்யப்பட்டது. இருவரும் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் டிரம்புக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் அவர் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டே அலுவலக பணிகளை கவனித்து வந்த டிரம்ப், 4 நாட்களுக்கு பிறகு கடந்த 5-ந்தேதி வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். பின்னர், தான் முற்றிலும் நலமாக இருப்பதாகவும், ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தை மீண்டும் தொடங்க ஆவலுடன் இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார். டிரம்ப் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டாலும் அவர் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்டுவிட்டாரா என்பதை அவரது மருத்துவர்கள் தெளிவுபடுத்தவில்லை.

corona treatment,us,trump,white house ,கொரோனா சிகிச்சை, அமெரிக்கா, டிரம்ப், வெள்ளை மாளிகை

இந்நிலையில், டிரம்புக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை முடிவடைந்ததாகவும் இன்று முதல் அவர் தனது அரசு பணிகளை மீண்டும் தொடங்குவார் என வெள்ளை மாளிகை தலைமை மருத்துவர் சீன் கான்லி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனாதிபதி தனது மருத்துவ குழுவால் பரிந்துரைக்கப்பட்ட கொரோனாவுக்கான சிகிச்சையை முடித்தார். ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு திரும்பியது முதல் அவரது உடல் நிலை சீராக உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் அதில், நோயின் முன்னேற்றத்தை குறிக்க எந்த அறிகுறிகளும் இல்லாமல் உள்ளது. ஜனாதிபதி டிரம்புக்கு கொரோனா கண்டறியப்பட்டதிலிருந்து இன்று 10-வது நாளாக இருக்கும். மேலும் குழு நடத்திவரும் மேம்பட்ட நோயறிதல்களின் பாதையின் அடிப்படையில் இன்று ஜனாதிபதி பொது வாழ்க்கைக்கு பாதுகாப்பாக திரும்புவதை நான் முழுமையாக எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|
|