Advertisement

மது அருந்தினால் கொரோனா தடுப்பூசி பலன் அளிக்காது

By: Nagaraj Wed, 09 Dec 2020 10:38:34 PM

மது அருந்தினால் கொரோனா தடுப்பூசி பலன் அளிக்காது

மது அருந்தினால் பலன் இருக்காது... கொரோனா தடுப்பூசி செலுத்தும்போதோ அதன் பிறகோ மது அருந்தினால் கொரோனா தடுப்பு மருந்து பலன் அளிக்காது என ரஷ்யா நிபுணர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா தயாரித்துள்ள "ஸ்புட்னிக்" கொரோனா தடுப்பு மருந்தானது இந்த வாரம் முதல் மக்களுக்கு செலுத்த தயாராகியுள்ளது. இதன் முதற்கட்டமாக மருத்துவ ஊழியர்கள்,சமூக பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு இந்த தடுப்பு மருந்து செலுத்தப்படவுள்ளது.

russia specialists,corona,immunity,vaccine ,ரஷ்யா நிபுணர்கள், கொரோனா, எதிர்ப்பு சக்தி, தடுப்பு மருந்து

இந்நிலையில், மதுபானம் அருந்துவது கொரோனா தடுப்புமருந்தை பாதிக்கும் என்பதால், தடுப்பூசி போடுவதற்கு 2 வாரங்களுக்கு முன்பும், தடுப்பூசி போட்ட 42 நாட்கள் வரையிலும் மதுபானம் அருந்தக்கூடாது என ரஷ்யா பொதுசுகாதார கண்காணிப்பு அமைப்பின் தலைவர் அன்னா போபோவா தெரிவித்துள்ளார்.

மேலும் மதுபானம் அருந்தினால் எதிர்ப்பு சக்தியை வலுவிழக்க செய்துவிடும் என்பதால் கொரோனா தடுப்பு மருந்து செலுத்திய பிறகு குறிப்பிட்ட காலத்திற்கு மது அருந்த வேண்டாம் என ரஷ்யா நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags :
|