Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சினோவக் பயோடெக் தயாரித்த கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என பரிசோதனையில் உறுதி

சினோவக் பயோடெக் தயாரித்த கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என பரிசோதனையில் உறுதி

By: Karunakaran Tue, 08 Sept 2020 09:09:03 AM

சினோவக் பயோடெக் தயாரித்த கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என பரிசோதனையில் உறுதி

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ரஷியா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகள் முன்னிலையில் உள்ளன. இந்த நாடுகளில் பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு, அவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளன. இந்த தடுப்பூசி சோதனையின் இறுதிகட்டமான 3-வது கட்டத்தில் பல தடுப்பூசிகள் உள்ளன.

இந்நிலையில் உலகம் முழுவதும் மொத்தம் 8 தடுப்பூசிகள் இறுதிகட்ட கட்ட பரிசோதனையில் உள்ளன.
அதில் 4 தடுப்பூசிகள் சீனாவை சேர்ந்தவை ஆகும். தற்போது, சீனாவின் சினோவக் பயொடெக் என்ற மருத்து தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என உறுதியாகியுள்ளது. சீன அரசால் அவசர பயன்பாட்டிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே அனுமதி வழங்கப்பட்ட தடுப்பூசிகளில் சினோவக் தடுப்பூசியும் ஒன்று.

corona vaccine,synovac biotech,vaccine test,china ,கொரோனா தடுப்பூசி, சினோவாக் பயோடெக், தடுப்பூசி சோதனை, சீனா

இந்த தடுப்பூசி சோதனை 2 கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையில், சினோவக் பயொடெக் நிறுவன ஊழியர்கள் குடும்பத்தினரும் 3 ஆயிரம் பேரும் பங்கேற்றுள்ளனர். இந்த 2 கட்ட பரிசோதனையிலும் சினோவக் தடுப்பூசி பாதுகாப்பானது என தெரியவந்துள்ளது. தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் 90 சதவிகிதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறிப்பிட்ட அளவில் அதிகரித்துள்ளது.

சினோவக் தடுப்பூசி தற்போது இறுதிகட்டமான 3-ம் கட்ட பரிசோதனையில் உள்ளது. இந்த இறுதிகட்ட பரிசோதனையும் வெற்றிபெற்றால், உலக அளவில் இந்த தடுப்பூசியை விற்பனை செய்ய சினோவக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த 3-ம் கட்ட பரிசோதனைகள் பிரேசில் மற்றும் இந்தோனேசியாவிலும் நடைபெறும்

Tags :