Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு டிசம்பா் மாதத்தில் விற்பனைக்கு வரலாம் - சீனா அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு டிசம்பா் மாதத்தில் விற்பனைக்கு வரலாம் - சீனா அறிவிப்பு

By: Karunakaran Thu, 20 Aug 2020 4:34:29 PM

கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு டிசம்பா் மாதத்தில் விற்பனைக்கு வரலாம் - சீனா அறிவிப்பு

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளது. கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும், நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆய்வாளர்கள் கொரோனாவிற்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதில் ஒரு சில நிறுவனங்களின் மருந்துகள், இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன. உலகளவில் 2.25 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

corona vaccine,december,china,corona virus ,கொரோனா தடுப்பூசி, டிசம்பர், சீனா, கொரோனா வைரஸ்

தற்போது சீனாவில் கொரோனா தடுப்பூசி, இந்த ஆண்டு டிசம்பா் மாதத்தில் விற்பனைக்கு வரலாம் என்று சீனாவின் 'சைனோ பார்ம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவா் லியு ஷிங்ஷென் கூறுகையில், தற்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்து, வரும் டிசம்பா் மாத இறுதியில் சந்தையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவருக்கு இரண்டு முறை போடுவதற்கான இரு தடுப்பூசிகளின் விலை 1,000 யுவான்களாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், சீனாவில் வசிக்கும் 140 கோடி பேருக்கும் அந்தத் தடுப்பூசி போட வேண்டிய அவசியம் இருக்காது என்று கருதுகிறோம். மாணவா்களுக்கும், பணியாளா்களுக்குமே அந்தத் தடுப்பூசி அவசர தேவையாக உள்ளது. மக்கள் நெருக்கம் குறைந்த தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவா்களுக்கு கொரோனா தடுப்பூசி இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|