Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைத்துவிடும் - சுகாதாரத்துறை அதிகாரி அறிவிப்பு

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைத்துவிடும் - சுகாதாரத்துறை அதிகாரி அறிவிப்பு

By: Karunakaran Thu, 22 Oct 2020 1:32:23 PM

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைத்துவிடும் - சுகாதாரத்துறை அதிகாரி அறிவிப்பு

ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன. பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன. இந்நிலையில், கொரோனா தடுப்பூசியை உருவாக்கும் ஆராய்ச்சியில் அமெரிக்காவை சேர்ந்த மார்டனா இங்ஸ், பிஷர் இங்க் நிறுவனங்களும் அடங்கும்.

இந்த இரு நிறுவனங்களின் தடுப்பூசிகள் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் நல்லமுன்னேற்றம் கண்டுள்ளன. இந்நிலையில், கொரோனாவால் அதிக பாதிப்புள்ளானவர்கள் அனைவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி தயாராகிவிடும் என அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

corona vaccine,united states,health department,corona virus ,கொரோனா தடுப்பூசி, அமெரிக்கா, சுகாதாரத் துறை, கொரோனா வைரஸ்

இதுகுறித்து அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைகள் செயலாளர் அலேக்ஸ் அசார் கூறுகையில், இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செலுத்த பாதுகாப்பான மற்றும் பலனளிக்கக்கூடிய கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும். மார்டனா இங்க் அல்லது பிஷர் இங்க் மருத்து தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து ஒன்று அல்லது இரண்டு தடுப்பூசிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கிடைக்கும் என்று அமெரிக்க அரசாங்கம் “எச்சரிக்கையுடன் நம்பிக்கையுடன்” உள்ளது என்று கூறினார்.

மேலும் அவர், மூத்த அதிகாரிகள், சுகாதாரத்துறை ஊழியர்கள், அவசர சிகிச்சை மீட்பு பிரிவினர் உள்ளிட்டோருக்கு ஜனவரி மாத முதல் வாரங்களில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும். ஒட்டுமொத்த அமெரிக்க மக்களுக்கும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தடுப்பூசி கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

Tags :