Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி உலகளவில் கிடைக்கும் - அமெரிக்க மருந்து நிறுவனங்கள் அறிவிப்பு

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி உலகளவில் கிடைக்கும் - அமெரிக்க மருந்து நிறுவனங்கள் அறிவிப்பு

By: Karunakaran Sun, 26 July 2020 7:30:27 PM

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி உலகளவில் கிடைக்கும் - அமெரிக்க மருந்து நிறுவனங்கள் அறிவிப்பு

உலகமெங்கும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று மாலை நிலவரப்படி, உலகம் முழுவதும் 1 கோடியே 57 லட்சத்து 59 ஆயிரத்து 651 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 6 லட்சத்து 40 ஆயிரத்து 253 பேர் உயிரிழந்தனர்.

கொரோனா வைரஸை தடுக்க தடுப்பூசிகளை உருவாக்கி சந்தைக்கு கொண்டு வருவதில் உலகளவில் மருந்து நிறுவனங்கள் இடையே பலத்த போட்டி நிலவுகின்றன. இந்நிலையில் இதுகுறித்து அமெரிக்காவில் எரிசக்தி மற்றும் வர்த்தக கமிட்டி உறுப்பினர்களை அமெரிக்க மருந்து நிறுவனங்களின் பிரதிநிதிகள் சந்தித்து பேசினர்.

corona vaccine,america,pharmaceutical company,world ,கொரோனா தடுப்பூசி, அமெரிக்கா, மருந்து நிறுவனம், உலகம்

‘ஒரு தடுப்பூசிக்கான பாதை- பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் அணுகக்கூடிய கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்க முயற்சிகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதம் குறித்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் சூசன் டபிள்யு புரூக்ஸ் கூறுகையில், ஒவ்வொரு நிறுவனமும் நடப்பு ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு தடுப்பூசியை உருவாக்கி கொண்டு வருவதற்கான சாதனை படைக்கும் வேகத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த விவாதத்தில் அஸ்ட்ரா ஜெனேகா, ஜான்சன் அண்ட் ஜான்சன், மெர்க், மாடர்னா, பைஸர் டாகின் ஆகிய முன்னணி மருந்து நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம், கொரோனா தடுப்பூசி, சிகிச்சைகளை உருவாக்க ‘ஆபரேஷன் வார்ப் ஸ்பீடு’ என்ற பெயரில் அதிவிரைவு திட்டத்தை தீட்டி, அதை நிறைவேற்ற முனைப்பு காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :